எப்போதும் வென்றான் அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி மேலும் 2 பேர் காயம்


எப்போதும் வென்றான் அருகே மின்னல் தாக்கி மூதாட்டி பலி மேலும் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 11 May 2018 2:00 AM IST (Updated: 11 May 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

எப்போதும் வென்றான் அருகே மின்னல் தாக்கி மாடுகளை மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

ஓட்டப்பிடாரம், 

எப்போதும் வென்றான் அருகே மின்னல் தாக்கி மாடுகளை மேய்த்து கொண்டிருந்த மூதாட்டி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.

மின்னல் தாக்கி மூதாட்டி பலி

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே உள்ளது சோழாபுரம். இந்த சோழாபுரத்தின் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி அருணாசலம் (வயது 65). இவரும் அதே பகுதியை சேர்ந்த மூக்கையா (55), சரசுவதி (53) ஆகியோர் நேற்று மதியம், ஊருக்கு தெற்கே காட்டு பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. இதில், மின்னல் தாக்கியதில் அருணாசலம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

மேலும் 2பேர் காயம்

மேலும் அருகே இருந்த மூக்கையா, சரசுவதி ஆகியோரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் அருணாசலத்தின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story