மாவட்ட செய்திகள்

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது + "||" + Public Distribution Project Will solve the problem Camp

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்
நாளை நடக்கிறது
நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

குறை தீர்க்கும் முகாம்

நெல்லை மாவட்டத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மூலம் ஒவ்வொரு மாதமும் தாலுகா அளவில் ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டாவது சனிக்கிழமை பொது வினியோக திட்டம் தொடர்பான குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது.

இந்த மாதத்துக்கான குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) கீழ்க்கண்ட தாலுகாக்களில் உள்ள கிராமங்களில் நடக்கிறது. பொது வினியோக திட்டத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் முகாம்களுக்கு சென்று தீர்வு காணலாம்.

கிராமங்கள்

நெல்லை தாலுகா கருங்காடு, பாளையங்கோட்டை தாலுகா முன்னீர்பள்ளம், சங்கரன்கோவில் தாலுகா தடியம்பட்டி, தென்காசி தாலுகா புல்லுக்காட்டுவலசை, செங்கோட்டை தாலுகா வல்லம், சிவகிரி தாலுகா தர்மாபுரி, வீரகேரளம்புதூர் தாலுகா வாடியூர் ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது.

ஆலங்குளம் தாலுகா ஆலடிபட்டி-3, அம்பை தாலுகா காட்டுபத்து, நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி, ராதாபுரம் தாலுகா சிதம்பராபுரம், கடையநல்லூர் தாலுகா சுந்தரேசபுரம், திருவேங்கடம் தாலுகா நாயக்கர்பட்டி, மானூர் தாலுகா அழகியபாண்டியபுரம், சேரன்மாதேவி தாலுகா திருவித்தாள்புளி ஆகிய ஊர்களில் நடக்கிறது. மேற்கண்ட கிராமங்களில் நடைபெறும் குறை தீர்க்கும் முகாம்களில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.