கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்


கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 10 May 2018 9:00 PM GMT (Updated: 10 May 2018 7:50 PM GMT)

கோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

மாட்டு வண்டி பந்தயம்

கோவில்பட்டி அருகே துறையூர் வெயிலுகந்தம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நேற்று காலையில் நடந்தது. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கி, கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தனர்.

பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 6 வண்டிகள் கலந்து கொண்டன. துறையூர்- பாண்டவர்மங்கலம் ரோட்டில் 10 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சங்கரப்பேரி கருத்தப்பாண்டி மாட்டு வண்டி முதல் இடமும், ஈராச்சி சிவகிரி மாட்டு வண்டி 2-வது இடமும், தெற்கு வண்டானம் மகேந்திரன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.

பின்னர் நடந்த சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 13 வண்டிகள் கலந்து கொண்டன. துறையூர்- கிழவிபட்டி ரோட்டில் 6 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் சித்தவநாயக்கன்பட்டி பரமசிவன் மாட்டு வண்டி முதல் இடமும், மறுகால்குறிச்சி பொன்னையன் மாட்டு வண்டி 2-வது இடமும், இடைச்சியூரணி மகிமா மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது.

பரிசளிப்பு

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக ரூ.21 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.18 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.15 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது. சிறிய மாட்டு போட்டியில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரத்து 1, 2-வது பரிசாக ரூ.13 ஆயிரத்து 1, 3-வது பரிசாக ரூ.11 ஆயிரத்து 1 வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ் பாண்டியன் தலைமையில், விழா குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story