இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்


இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் விவரம்
x
தினத்தந்தி 10 May 2018 8:30 PM GMT (Updated: 10 May 2018 8:04 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

அம்மா திட்ட முகாம்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டம் அம்மா திட்டம். அந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி தாலுகாவில் அய்யனடைப்பு கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் கால்வாய் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவில் நங்கைமொழி கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவில் சாஸ்தாவிநல்லூர் கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவில் வடக்குப்பட்டி கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவில் கே.குமரெட்டையாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவில் டி.தங்கம்மாள்புரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் கே.சண்முகபுரம் கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவில் தெற்கு மயிலோடை கிராமத்திலும் அந்தந்த தாசில்தார் தலைமையில் இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

கோரிக்கை மனு

இந்த முகாம்களில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு - இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story