ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி 15-ந்தேதி தொடங்குகிறது
ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் தாலுகாக்களில் ஜமாபந்தி வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வல்லநாடு
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் ஜமாபந்தி நடைபெறும். தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரசாந்த் வருவாய் தீர்வாய அலுவலராக இருப்பார்.
வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கலியாவூர், உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்சி, வட வல்லநாடு, வல்லநாடு கஸ்பா ஆகிய கிராமங்களுக்கும், 16-ந்தேதி (புதன்கிழமை) ஆழிகுடி, முறப்பநாடு புதுகிராமம், கீழ புத்தனேரி, முறப்பநாடு கோவில்பத்து, வசவப்பபுரம், செக்காரக்குடி பகுதி-1, மீனாட்சிபுரம், செக்காரக்குடி பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கும்,
செய்துங்கநல்லூர்
17-ந்தேதி (வியாழக்கிழமை) வடக்கு காரசேரி, தெய்வசெயல்புரம், செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, கீழ வல்லநாடு, நாணல்காடு, மணக்கரை ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆழ்வார்கற்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, விட்டிலாபுரம், விட்டிலாபுரம் கோவில்பத்து, முத்தலாங்குறிச்சி, செய்துங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும்,
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கருங்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், வல்லகுளம், கால்வாய், ஆறுமுகமங்கலம், சிறுத்தொண்டநல்லூர் ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி (புதன்கிழமை) வாழவல்லான், திருப்பணி செட்டியாபத்து, கொற்கை, கொடுங்கனி, கொட்டாரக்குறிச்சி, மாரமங்கலம், அகரம் ஆகிய கிராமங்களுக்கும்,
ஸ்ரீவைகுண்டம்
24-ந்தேதி (வியாழக்கிழமை) மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, தன்னூத்து, சிவகளை, கீழ்பிடாகை, அப்பன்கோவில், கீழ்பிடாகை கஸ்பா ஆகிய கிராமங்களுக்கும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மங்களகுறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, திருப்பணிசெட்டிகுளம், சாயர்புரம், இருவப்பபுரம் பகுதி-1, இருவப்பபுரம் பகுதி-2 ஆகிய கிராமங்களுக்கும், 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வெள்ளூர் கஸ்பா, வெள்ளூர் ஆதிச்சநல்லூர், தோழப்பன்பண்ணை, பத்மநாபமங்கலம், அணியாபரநல்லூர், ஸ்ரீமூலக்கரை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய கிராமங்களுக்கும், 30-ந்தேதி (புதன்கிழமை) வெள்ளூர் புதுக்குடி, பராங்குசநல்லூர், திருப்புளியங்குடி, கீழ்பிடாகை வரதராஜபுரம், பராக்கிரமபாண்டி, பேரூர் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.
எனவே மேற்கண்ட நாட்களில் அந்தந்த கிராம மக்கள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று எட்டயபுரம் தாசில்தார் வதனாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பேரிலோவன்பட்டி
எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் செழியன் வருவாய் தீர்வாய அலுவலராக செயல்படுகிறார்.
15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைக்காட்டுபுரம், சிங்கிலிபட்டி ஆகிய கிராமங்களுக்கும், 16-ந்தேதி (புதன்கிழமை) கழுகாசலபுரம், வேலிடுபட்டி, என்.புதுப்பட்டி, அயன்கரிசல்குளம், வி.கோடாங்கிபட்டி, வெம்பூர், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களுக்கும்,
மாசார்பட்டி
17-ந்தேதி (வியாழக்கிழமை) மேலக்கரந்தை, மாசார்பட்டி, ராஜாப்பட்டி, அருணாசலபுரம், தோழ்மாலைபட்டி, கருப்பூர், வீரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முத்துலாபுரம், கீழ்நாட்டுகுறிச்சி, சக்கிலிபட்டி, தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், என்.வேடப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,
22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) போடுபட்டி, ஆத்திகிணறு, தி.சண்முகபுரம், எத்திலப்பநாயக்கன்பட்டி, சோழபுரம், புங்கவர்நத்தம், கன்னக்கட்டை ஆகிய கிராமங்களுக்கும், 23-ந்தேதி (புதன்கிழமை) சிதம்பராபுரம், கட்டராமன்பட்டி, கடலையூர், உருளைகுடி, அய்யாகோட்டையூர், மீனாட்சிபுரம், நாவலக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும்,
எட்டயபுரம்
24-ந்தேதி (வியாழக்கிழமை) சிந்தலக்கரை, சின்னமலைக்குன்று, இளம்புவனம், குமாரகிரி, ரணசூர எட்டுநாயக்கன்பட்டி, சுரைக்காய்பட்டி, செமப்புதூர் ஆகிய கிராமங்களுக்கும், 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஈராச்சி, எட்டயபுரம், மேல ஈரால், வாலம்பட்டி, நக்கலக்கட்டை, கீழ ஈரால், டி.அருணாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.
எனவே மேற்கண்ட நாட்களில் அந்தந்த கிராம மக்கள் நேரில் வந்து தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வழங்கி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story