வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் உயிர் தப்பினார்


வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 11 May 2018 4:00 AM IST (Updated: 11 May 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே வீட்டுக்குள் கார் புகுந்தது; பெண் உயிர் தப்பினார்.

அம்மாபேட்டை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பண்ணத்தூர் சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 34). இவருடைய மனைவி ரேவதி (28). இவர்கள் 2 பேரும் காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக வந்திருந்தனர். பின்னர் மருத்துவ பரிசோதனை முடிந்து இவர்கள் 2 பேரும் திருவண்ணாமலைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுதாகர் ஓட்டினார். அருகில் அவருடைய மனைவி ரேவதி அமர்ந்து இருந்தார். கார் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையில் உள்ள மேட்டூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அந்தப்பகுதியை சேர்ந்த அர்ஜூனன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. இந்த விபத்தில் வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. இதில் வீட்டில் இருந்த அர்ஜூனனின் மனைவி ரேவதி (32) என்பவர் லேசான காயத்துடன் உயிர்தப்பினார். இதேபோல் காருக்குள் இருந்த சுதாகர் மற்றும் அவருடைய மனைவி ரேவதிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story