மாவட்ட செய்திகள்

மாங்காடு அருகே பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு + "||" + Electricity hit the worker's death

மாங்காடு அருகே பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

மாங்காடு அருகே
பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
மாங்காடு அருகே பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பரணி புத்தூர், தெருவீதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39). கூலித்தொழிலாளி. நேற்று புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி பிறந்தநாள் என்பதால் நேற்றுமுன்தினம் இரவு பரணி புத்தூர் பகுதியில் பேனர் வைக்கும் பணியில் வெங்கடேசன் ஈடுபட்டார்.

அப்போது மேலே சென்று கொண்டிருந்த மின்வயரில் எதிர்பாராதவிதமாக வெங்கடேசனின் கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த வெங்கடேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த தும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
தூத்துக்குடி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
2. ஆவடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
ஆவடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.