மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி நகை பறிப்பு படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு


மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி நகை பறிப்பு படுகாயம் அடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 May 2018 3:14 AM IST (Updated: 11 May 2018 3:14 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

மீஞ்சூர், 

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வேளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 64). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயா (58). அவர்கள் நேற்றுமுன்தினம் இரவு திருவெள்ளைவாயல் பஜாரில் இருந்து வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

திருவெள்ளைவாயல்- இலவம்பேடு சாலையில் வரும்போது மர்மநபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவர்களை இரும்பு கம்பியால் தாக்கி 10 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

சாவு

அந்த வழியாக வந்த தேவதானம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மர்மநபர்களை பிடிக்க முயன்ற போது அவரையும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார், தாக்குதலில் காயம் அடைந்த 3 பேரையும் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜெயராமனை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து காட்டூர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Next Story