வேலைக்கு செல்லவில்லையே என்று பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை
காஞ்சீபுரம் அருகே வேலைக்கு செல்லவில்லையே என்று பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பொன்னேரிக்கரை ஜெ.ஜெ.நகர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் இவரது மகன் சதீஷ் (வயது23). இவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
அதனை அவரது பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சதீஷ் அரளி விதையை அரைத்து குடித்தார்.
சாவு
உடனடியாக அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story