சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா அனல் பறக்கும் பிரசாரம் ‘காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ என வேண்டுகோள்
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மைசூரு,
சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள்’ என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சித்தராமையா அனல் பறக்கும் பிரசாரம்
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. தேர்தலையொட்டி, பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் கர்நாடகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று முதல்-மந்திரி சித்தராமையா, தன்னுடைய சாமுண்டீஸ்வரி தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் மதியம் 1 மணியில் இருந்து 5 மணி வரை பல்வேறு கிராமங்களில் திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். பகிரங்க பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று ஒரே நாளில் சித்தராமையா 13 இடங்களில் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வாய்ப்பு தாருங்கள்
இந்த பிரசாரத்தின்போது சித்தராமையா பேசுகையில், கடந்த ஆட்சியில் ஊழலில் சிக்கிய பா.ஜனதாவுக்கு மக்கள் தேர்தலில் தக்க பாடத்தை புகட்ட வேண்டும். பொய்யான தகவல்களை கூறி பா.ஜனதாவினர் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கடந்த ஆட்சியில் நடந்தவற்றை மக்கள் மறந்திருப்பார்கள் என அவர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள். மக்கள் எதையும் மறக்கவில்லை. யாரும் பா.ஜனதாவை ஆதரிக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளது. எனது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள். காங்கிரஸ் கட்சியால் மட்டும் தான் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று அவர் பேசினார்.
அரசியல் தலைவர்கள்
இதைத்தவிர, மைசூரு மாவட்டத்தில் யதீந்திரா, விஜயேந்திரா, ஜி.டி.தேவேகவுடா, மந்திரி தன்வீர்சேட், சோமசேகர், வாசு ஆகியோர் மைசூரு மாவட்டத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பகிரங்க பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று மைசூருவில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது.
சித்தராமையாவுக்கு இணையாக சாமுண்டீஸ்வரி தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் ஜி.டி.தேவேகவுடாவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
Related Tags :
Next Story