ஒரு ஆண்டுக்கு முதல்-மந்திரி பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ.6 கோடி


ஒரு ஆண்டுக்கு முதல்-மந்திரி பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயண செலவு ரூ.6 கோடி
x
தினத்தந்தி 11 May 2018 3:45 AM IST (Updated: 11 May 2018 3:44 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயணத்திற்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை செலவழிக்கப்படுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மும்பை, 

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயணத்திற்காக ஆண்டுக்கு ரூ.6 கோடி வரை செலவழிக்கப்படுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

ஹெலிகாப்டர் பயணம்

மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆண்டு ஹெலிகாப்டர் பயணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்கள் அரங்கேறி அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்த சம்பவங்களை தொடர்ந்து, மாநில அரசு முதல்-மந்திரியின் பயணத்திற்காக அதிநவீன ரக ஹெலிகாப்டரை வாங்க திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், மும்பையை சேர்ந்த சமூக ஆர்வலர் அனில் கல்கலி என்பவர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயணத்திற்காக செலவிடப்படும் தொகையை தெரிவிக்கும்படி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

ரூ.6 கோடி செலவு

அவருக்கு முதல்-மந்திரி அலுவலகம் அளித்து உள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

முதல்-மந்திரி பட்னாவிசின் ஹெலிகாப்டர் பயண செலவு 2014-15-ம் ஆண்டு ரூ.5 கோடியே 37 லட்சமும், 2015-16-ம் ஆண்டு ரூ.5 கோடியே 42 லட்சமும், 2016-17-ம் ஆண்டு ரூ.7 கோடியே 23 லட்சமும், 2017-18-ம் ஆண்டு 6 கோடியே 19 லட்சமும் ஆகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ.6 கோடி ஹெலிகாப்டர் பயண செலவு ஆகியுள்ளதாக கூறப்பட்டு இருக்கிறது.

Next Story