நரிமன்பாயிண்டில் 11-வது மாடியில் இருந்து குதித்து வெளிநாட்டு வாலிபர் தற்கொலை


நரிமன்பாயிண்டில் 11-வது மாடியில் இருந்து குதித்து வெளிநாட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 11 May 2018 4:02 AM IST (Updated: 11 May 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

நரிமன்பாயிண்டில் 11-வது மாடியில் இருந்து குதித்து வெளிநாட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,

நரிமன்பாயிண்டில் 11-வது மாடியில் இருந்து குதித்து வெளிநாட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

வெளிநாட்டு வாலிபர்

மும்பை நரிமன்பாயிண்டில் மேக்கர் சாம்பர்ஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்துக்கு நேற்றுமுன்தினம் வெளிநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். கட்டிடத்தின் 11-வது மாடிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் கப்பரடே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

அந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும் என்று தெரிகிறது. அவர் அடையாள அட்டை எதுவும் வைத்திருக்கவில்லை. இதன் காரணமாக அவரது பெயர் மற்றும் அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவரவில்லை. அவர் ருமேனிய நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதற்காக போலீசார் ருமேனிய தூதரகத்தை நாடி உள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story