கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளை 11, 12-ம் வகுப்புகளில் படிக்க வைக்க ஏற்பாடு அதிகாரி தகவல்
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளை 11, 12-ம் வகுப்புகளில் சேர்த்து படிக்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் உதவி ஆணையர் முகம்மது யூசுப் தெரிவித்தார்.
பெரம்பலூர்,
தமிழக அரசின் தொழி லாளர் துறை வெளியிட்டுள்ள அரசாணையின் படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகள் பயின்று 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறு பவர்களை 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அப்பகுதியில் நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிதியின்மூலம் ஆணையிடப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளை இந்த திட்டத்தின்கீழ் 2018-19-ம் கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்வு முடிவின் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து கல்வி பயில விருப்பமுள்ளவர்கள் பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்்தை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இதுகுறித்த விபரங்கள் அறிய மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) 434 ஏ. மேட்டுத்தெரு, எளம்பலூர் சாலை, பெரம்பலூர் என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story