இலவசம் தந்த இன்பம்


இலவசம் தந்த இன்பம்
x
தினத்தந்தி 11 May 2018 3:58 PM IST (Updated: 11 May 2018 3:58 PM IST)
t-max-icont-min-icon

கலிபோர்னியாவில் வசிக்கும் 44 வயது ஜெப் ரெய்ட்ஸ் தினமும் டிஸ்னிலேண்டுக்குச் சென்று வருகிறார்.

விமானப்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெப் ரெய்ட்ஸ், கடந்த இரண்டு ஆயிரம் நாட்களாக தொடர்ந்து டிஸ்னிலேண்ட் சென்று வருகிறாராம். ஆனாலும் டிஸ்னி மயக்கத்திலிருந்து இன்னும் தெளியவில்லை என்கிறார்.

“2012-ம் ஆண்டு ஜனவரி மாதம், எனக்குப் பரிசாக 6 வருடம் முழுவதும் டிஸ்னிலேண்ட் செல்வதற்கான அனுமதி கிடைத்தது. இதை யாராலும் தினமும் பயன்படுத்த இயலாது. ஆனால் நான் தினமும் செல்ல ஆரம்பித்தேன். அப்போது எனக்கு வேலை இல்லை. அதனால் அங்கு செல்வதை மட்டுமே ஒரே வேலையாக வைத்திருந்தேன்.

பிறகு ஒரு வேலை கிடைத்தபோதும் நான் தினமும் செல்வதை நிறுத்தவில்லை. மாலையில் சிறிது நேரமாவது போய்விட்டு வந்துவிடுவேன். மழை, வெயில் எதுவும் என்னுடைய திட்டத்தை மாற்றவில்லை. அதனால் 5 ½ ஆண்டுகளில் 2 ஆயிரம் நாட்கள் சென்றிருக்கிறேன். இங்கேதான் எனக்கு காதலி கிடைத்தார். நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். அதனால் இலவச அனுமதி முடிந்தபிறகும், கட்டணம் செலுத்தி சுற்றிப்பார்க்க இருக்கிறேன்’’ என்கிறார், ஜெப் ரெய்ட்ஸ். இவருக்கு இலவச அனுமதி என்றாலும், டிஸ்னி லேண்டுக்குள் சென்று திரும்ப, ஒரு நாளைக்கு 50 டாலர்கள் வரை செலவாகுமாம்.


Next Story