உசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பூமிபூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


உசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகள், பூமிபூஜையை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 May 2018 10:00 PM GMT (Updated: 11 May 2018 7:27 PM GMT)

உசிலம்பட்டி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை எம்.எல்.ஏ. பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி ஒன்றியத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விளாம்பட்டியிலிருந்து கவணம்பட்டி வரை ரூ.12.40 லட்சம் மதிப்பில் சாலை மேம்படுத்தும் பணியையும், உத்தப்பநாயக்கனூர் ஊரட்சிக்கு உட்பட்ட உ.வாடிப்பட்டி சாலையை 14.39 லட்சம் மதிப்பிலும், உ.வாடிப்பட்டி முதல் முனீஸ்வரன் கோவில் வரை ரூ.12.46 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியும் நடக்கிறது.

ரூ.11.10 லட்சம் மதிப்பில் தொட்டப்பநாயக்கனூர் அருகே உள்ள சேர்வைப்பட்டி சாலை, ரூ.8.87 லட்சம் மதிப்பில் நடுப்பட்டி சாலை, ரூ.51.86 லட்சம் மதிப்பில் லிங்கப்பநாயக்கனூரிலிருந்து சடையான் வரை உள்ள சாலையையும், ரூ18.50 லட்சம் மதிப்பில் நல்லதாங்காள் கோயில் சாலை மேம்பாட்டுப் பணி, பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேக்கிழார்பட்டியிருந்து திம்மநத்தம் வரை ரூ.2¼ கோடி மதிப்பில் மேம்பாட்டுப் பணிகள் உள்பட வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற உள்ளது.

மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பில் நக்கலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் கட்டுவது, மேக்கிழார்பட்டியில் ரூ.8½ லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தையும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. நீதிபதி பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வராமன், யூனியன் பொறியாளர் கண்ணன், அ.தி.மு.க. உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமா.ராஜா, முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டி, துணை சேர்மன் பாண்டியம்மாள் செல்வராஜ், போத்தம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் உக்கிரபாண்டி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகரன், மேக்கிழார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story