பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பண்ருட்டி,
பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகரக்குழு சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர செயலாளர் உத்தராபதி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் உதயகுமார், ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட சங்க நிர்வாகி ஜீவா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இருசக்கர வாகனத்துக்கும், ஆட்டோவுக்கும் மாலை அணிவித்து பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்
Related Tags :
Next Story