மாவட்ட செய்திகள்

சிதம்பரத்தில் வங்கி கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + Bank Confederation Demonstrated

சிதம்பரத்தில் வங்கி கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் வங்கி கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிதம்பரம்,

சிதம்பரத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் இந்தியன் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ரமணி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் கலியபெருமாள், இந்தியன் வங்கி அதிகாரிகள் சம்மேளனத்தை சேர்ந்த நீலமேகம், இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கம் ராஜமாணிக்கம், கடலூர் மாவட்ட ஊழியர் சங்க தலைவர் முருகேசன், கார்ப்பரேசன் வங்கி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் இந்தியன் வங்கி முதுநிலை மேலாளர் சற்குணம் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். தொடர்ந்து வங்கி ஊழியர் சங்க மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார். முடிவில் சிண்டிகேட் வங்கி ஊழியர் சங்கம் சீனுவாசபிரசன்னா நன்றி கூறினார்.