மாவட்ட செய்திகள்

குன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதல்; பெண் பலி + "||" + Mobat - Larry Clash; Woman Dead

குன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதல்; பெண் பலி

குன்றத்தூர் அருகே
மொபட்-லாரி மோதல்; பெண் பலி
குன்றத்தூர் அருகே மொபட்-லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்.
பூந்தமல்லி, 

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, லட்சுமி நகரை சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் கமலி (வயது 25), தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது தம்பியும் வேலைக்கு செல்வதால் நேற்று காலை மொபட்டில் தனது தம்பியை ஏற்றிக்கொண்டு குன்றத்தூர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். குன்றத்தூர்-போரூர் சாலை, மூன்றாம் கட்டளை அருகே வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த லாரி, மொபட் மீது மோதியது.

சாவு

இதில் கமலி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார். இதை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் கமலியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள் கமலி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.