5 நாட்களுக்கு ரெயில் சேவையில் மாற்றம்
திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் 5 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
திருநின்றவூரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை 5 நாட்கள் மூர்மார்க்கெட்-ஆவடி இரவு 12.15 மணி, மூர்மார்க்கெட்-அரக்கோணம் இரவு 1.20 மணி மின்சார ரெயில்கள் வில்லிவாக்கத்தில் இருந்து விரைவு பாதையில் செல்லும். இதனால் சில ரெயில் நிலையங்களில் நிற்காது. 12, 13, 14-ந்தேதிகளில் மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை காலை 7.30, 8.15 மணி ரெயில்கள் மூர்மார்க்கெட்-எலாவூர் இடையேயும், சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் காலை 10, 11.15 மணி ரெயில்கள் எலாவூர்-மூர்மார்க்கெட் இடையேயும் இயக்கப்படும்.
12, 13, 19, 20-ந்தேதிகளில் சென்டிரல்-விஜயவாடா பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12712) ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும், விஜயவாடா-சென்டிரல் பினாங்கினி எக்ஸ்பிரஸ் (12711) 1 மணி 20 நிமிடம் தாமதமாக வந்துசேரும். மூர்மார்க்கெட்-ஆவடி பகல் 2.05, ஆவடி-மூர்மார்க்கெட் 2.50 மணி ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 13 மற்றும் 20-ந்தேதிகளில் சூலூர்பேட்டை-மூர்மார்க்கெட் பகல் 12 மணி ரெயில் 1 மணி 30 நிமிடம் தாமதமாக புறப்படும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story