சென்னை வடபழனி வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி


சென்னை வடபழனி வணிக வளாகத்தில் 4-வது மாடியில் இருந்து குதித்து என்ஜினீயர் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 12 May 2018 4:00 AM IST (Updated: 12 May 2018 4:00 AM IST)
t-max-icont-min-icon

வேலை கிடைக்காத விரக்தியில் வணிக வளாக அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து என்ஜினீயர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

கோயம்பேடு,

சென்னை வட பழனி, ஆற்காடு சாலையில் கமலா திரையரங்கம் எதிரில் தனியார் அடுக்குமாடி வணிகவளாக கட்டிடம் உள்ளது. அதில் நான்காவது மாடியிலிருந்து ஒரு வாலிபர் குதிக்க முயன்றார். இதைப் பார்த்த அங்கு இருந்தவர்கள் அவரை வேண்டாம்... என எச்சரித்து சத்தம் போட்டனர்.

ஆனாலும் அதை கேட்காமல் அந்த வாலிபர் ஏறி குதித்தார். சத்தம் கேட்டு அதை தரைதளத்திலிருந்து கவனித்த பாதுகாவலர் சகாயம் ஓடிச்சென்று அவரை 2 கைகளாலும் தாங்கிப்பிடித்தார். இதனால் அந்த வாலிபரின் தலை தரையில் மோதாமல் தவிர்க் கப்பட்டு உயிர்தப்பினார்.

என்ஜினீயர்

ஆனால் இந்த சம்பவத்தில் பாதுகாவலர் சகாயத்தின் கை முறிந்தது. குதித்த வாலிபரும் காயம் அடைந்தார். இரண்டு பேரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து வடபழனி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிதம்பரத்தை சேர்ந்த சபரிநாதன் (வயது 27) என்று தெரிந்தது. பொறியியல் பட்டதாரியான இவர் பூந்தமல்லி அருகே உள்ள குமணன் சாவடியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

வேலை கிடைக்கவில்லை

இங்கு தங்கியிருந்து வேலை தேடிவந்த அவருக்கு சரியான வேலை கிடைக்காததால் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு வேலை கிடைக்காததற்கு இடஒதுக்கீடு மற்றும் நிர்வாக குளறுபடிகள் தான் காரணம் என்று அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதுபற்றி தற்கொலை முயற்சிக்கு முன்னதாக முகநூலில் பதிவு செய்துள்ளார்.

வாலிபரின் தலை தன் மீது விழுந்தால் உயிர் போய்விடும் என்று தெரிந்தும், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அவரை தாங்கிப்பிடித்து காப்பாற்றிய பாதுகாவலர் சகாயத்தை வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்களும், போலீ சாரும் பாராட்டினார்கள். 

Next Story