தேர்தல் வெற்றிக்காக பா.ஜனதா மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டில் ஈடுபடுகிறது சிவசேனா பரபரப்பு குற்றச்சாட்டு
தேர்தல் வெற்றிக்காக பா.ஜனதா கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
மும்பை,
தேர்தல் வெற்றிக்காக பா.ஜனதா கட்சி மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக சிவசேனா பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டைகள்
கர்நாடக மாநிலத்தில் இன்று(சனிக்கிழமை) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கூறி இருப்பதாவது:-
பணப்புழக்கம்
கர்நாடகத்தில் கட்டுக்கட்டாக போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் கர்நாடகத்தில் தரம் தாழ்ந்து வரும் தேர்தல் முறையின் புதிய முகத்தை காட்டுகிறது. கிராம பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை அனைத்து தேர்தல்களிலும் தற்போது பணம் அதிகளவில் செலவழிக்கப்படுகிறது.
முன்பெல்லாம் காங்கிரஸ் தான் இதுபோன்ற செலவு செய்து வந்தது. ஆனால் பா.ஜனதாவும் இப்போது இதில் ஈடுபட்டு வருகிறது. இவ்வளவு பணம் பா.ஜனதாவுக்கு எங்கிருந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதில் ரகசியம் ஏதும் கிடையாது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்களது கர்நாடக தேர்தல் அறிக்கையை பா.ஜனதா காப்பி அடித்துவிட்டதாக குற்றம்சாட்டுகிறார். ஆனால் பா.ஜனதா கர்நாடக தேர்தலில் காங்கிரசின் ஏமாற்று நடவடிக்கைகளையே காப்பி அடித்து இருக்கிறது.
முறைகேடு
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாக்குச்சீட்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றபோது அவரது வெற்றியின் நம்பகத்தன்மை குறித்து சிவசேனா தலைவர் மறைந்த பால் தாக்கரே கேள்வி எழுப்பினார். தற்போது வாக்குச்சீட்டுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. பா.ஜனதா கட்சி தேர்தல் வெற்றிக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது.
இதன்பிறகும் தற்போதைய வாக்குப்பதிவு முறையை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதிகாரத்தில் இருப்பவர்களின் முகமூடிகள் தான் மாறுகின்றன. முகங்கள் அப்படியேதான் உள்ளன. பா.ஜனதா காங்கிரசை தோற்கடிக்கவில்லை. மாறாக அது(பா.ஜனதா) தன்னையே காங்கிரசுடன் இணைத்து கொண்டுவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story