திருச்சியில் 14-ந்தேதி சுமைப்பணி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு சங்க கூட்டத்தில் தீர்மானம்


திருச்சியில் 14-ந்தேதி சுமைப்பணி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 May 2018 4:06 AM IST (Updated: 12 May 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் சுமைப்பணி தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி சுமைப்பணி தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சத்திரம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். காந்திமார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வேலை உத்தரவாதம் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருகிற 14-ந்தேதி திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துதல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள், சுமைப்பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் ராமர் வரவேற்று பேசினார். முடிவில் குண சேகரன் நன்றி கூறினார். 

Next Story