தொட்டியம் அருகே ஏழூர்பட்டி பகவதி அம்மன் கோவிலில் தேர்தூக்கும் நிகழ்ச்சி
ஏழூர்பட்டி பகவதி அம்மன் கோவில் திருவிழாவில் தேர்தூக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொட்டியம்,
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஏழூர்பட்டி மற்றும் அளியாபுரம் பகவதிஅம்மன், கருப்பண்ணசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 1-ந் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 8-ந்தேதி நள்ளிரவு கோவில் வளாகத்தில்் திருத்தேர் தலையலங்காரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பக்தர்களும் பொதுமக்களும் பால்குடம், தீர்த்தகுடம், அக்னிசட்டி எடுத்து அலகு குத்தி கொண்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். பின்னர் கிடா வெட்டு நிகழ்ச்்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்தூக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஏழூர்பட்டி கோவிலில் இருந்து தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து எருமபட்டிரோடு, திருச்சி-சேலம் மெயின்ரோடு, காட்டுப்புத்தூர் ரோடு உள்பட ஏழூர்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். பின்னர் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) அளியாபுரத்தில் திருத்தேர் திருவீதியுலாவும் மஞ்சள் நீராடல் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஏழூர்பட்டி மற்றும் அளியாபுரத்தை சேர்ந்த ஊர்முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story