நவிமும்பை விமான நிலைய பணிகளை 2019-ம் ஆண்டுக்குள் முடிப்பது கடினம் விமான போக்குவரத்து துறை செயலாளர் தகவல்

நவிமும்பை விமான நிலைய பணிகளை 2019-ம் ஆண்டுக்குள் முடிப்பது கடினம் விமான போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2018 10:52 PM GMT (Updated: 11 May 2018 10:52 PM GMT)

நவிமும்பை சர்வதேச விமான நிலைய பணிகளை 2019-ம் ஆண்டிற்குள் முடிப்பது கடினம் என விமான போக்குவரத்து துறை செயலாளர் கூறி உள்ளார்.

மும்பை, 

நவிமும்பை சர்வதேச விமான நிலைய பணிகளை 2019-ம் ஆண்டிற்குள் முடிப்பது கடினம் என விமான போக்குவரத்து துறை செயலாளர் கூறி உள்ளார்.

நவிமும்பை விமான நிலையம்

நவிமும்பை சர்வதேச விமான நிலைய பூமி பூஜை 3 மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடந்தது. விழாவில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் விமான நிலைய பணிகள் முடிந்து 2019-ம் ஆண்டிற்குள் அங்கு விமான சேவை தொடங்கப்படும் என்றார். இந்தநிலையில் விமான நிலைய பணிகள் நடந்து வரும் பகுதிகளில் வசித்து வரும் கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையப்பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

2019-க்குள் முடிப்பது கடினம்

இந்தநிலையில் விமான போக்குவரத்து துறை செயலாளர் ஆர்.என். துபே நேற்று முன்தினம் விமானநிலைய பணிகளை பார்வையிட வந்தார்.

அப்போது அவர் கூறுகையில், “ திட்டமிட்டபடி பணிகள் நடந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 2019-ம் ஆண்டிற்குள் விமான நிலைய பணிகளை முடிப்பது கடினமான ஒன்றுதான். எனினும் திட்டமிடப்பட்டுள்ள காலத்திற்குள் பணிகளை முடிக்க முயற்சி செய்வோம்” என்றார்.

Next Story