மாவட்ட செய்திகள்

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை + "||" + Doctors work in 24 hours at Nedumangalam Government Hospital

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை
நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அரசினர் மருத்துவமனையில் தினமும் 700-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்கு பகலில் மட்டுமே அதாவது காலை முதல் மதியம் வரை தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். அதன் பிறகு மருத்துவர்கள் இருப்பதில்லை. செவிலியர்களை கொண்டே சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மன்னார்குடி, தஞ்சாவூருக்கு பரிந்துரைக்கும் நிலை உள்ளது. இரவு நேர மருத்துவரும் இருப்பதில்லை. இதை கண்டித்து நீடாமங்கலத்தில் அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தகர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இருந்தது.


இந்த நிலையில் திருவாரூர் மாவட்ட இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் நேற்று நீடாமங்கலத்திற்கு வந்தார். அப்போது அவரை வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன் தலைமையில், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சந்தித்து நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பகல் மற்றும் மதியம் கட்டாயம் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும். எக்ஸ்ரே எடுப்பவரை நீடாமங்கலத்திலேயே பணியில் இருக்க செய்ய வேண்டும். மருந்துகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

நீடாமங்கலம் அரசினர் மருத்துவமனைக்கென்று தனியாக மின்மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு இணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் செந்தில்குமார் கூறுகையில், நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்று ( அதாவது நேற்று) முதல் 24 மணி நேரமும் மருத்துவர்கள்பணியாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீர் சாவு - போலீசார் விசாரணை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட பெண் குழந்தை திடீரென இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதம்
திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் டாக்டர்களுடன், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை - டீன் விளக்கம்
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை என மருத்துவமனை டீன் அசோகன் விளக்கம் அளித்து உள்ளார்.
4. விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்
விழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.
5. வாழப்பாடி: அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
வாழப்பாடி அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.