மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு + "||" + An accident near Rajapalayam to die in the accident

ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு

ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் சாவு
ராஜபாளையம் அருகே துக்கம் விசாரிக்க வந்தவர் விபத்தில் உயிரிழந்தார்.
ராஜபாளையம்,.

நெல்லை மாவட்டம் தேவிபட்டினம் காமராஜர் தெருவை சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் முருகன் (வயது24). கூலித் தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் ராஜபாளையத்தில் தனது உறவினர் வீட்டில் துக்கம் விசாரிக்க வந்தார். துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.


ராஜபாளையம் கோவிலூர் விதைப்பண்னை அருகே உள்ள வளைவில் திரும்பிய போது எதிரே மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகன் உயிர் இழந்தார். விபத்து குறித்து சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் விசாரணை மேற்கொண்டார். இருசக்கர வாகனத்தில் வந்த கோவிலூர் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு டிரைவர், கண்டக்டர் கைது
குளச்சலில் அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. திருக்கனூர் அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புதுமாப்பிள்ளை சாவு
திருக்கனூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாகச் செத்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
3. திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் சாவு
திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.
4. திங்களூர் அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ் ஏட்டு சாவு
திங்களூர் அருகே சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக இறந்தார்.
5. மதுபோதையில் வீட்டின் மாடிப்படியில் தவறி விழுந்த டிரைவர் சாவு
புதுக்கடை அருகே மது போதையில் வீட்டின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.