மாவட்ட செய்திகள்

இளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம் + "||" + DMK resolution to declare the junior Union as drought

இளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம்

இளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம்
இளையான்குடி யூனியனை வறட்சிப்பகுதியாக அறிவிக்க தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
இளையான்குடி,

இளையான்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க ஊராட்சி செயலர்கள் மற்றும் பேரூர் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இளையான்குடியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு துணை அமைப்பாளர் நாசர் தலைமை தாங்கினார். பேரூர் செயலர் நஜிமுதீன், மானாமதுரை தொகுதி தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுப.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளரும், முன்னாள், எம்.எல்.ஏ. சுப.மதியரசன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை வருகிற ஜூன் மாதம் முழுவதும் கொண்டாடுவது என்றும், வருகிற 15-ந் தேதி இளையான்குடியில் ஒன்றியம் மற்றும் பேரூரில் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் நியனம் குறித்து நேர்காணல் நடத்துவது, இளையான்குடி ஒன்றியத்தை வறட்சிப் பகுதியாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை தொடங்கி வறட்சி நிவாரண தொகை வழங்க வேண்டும், காவிரி கூட்டுக் குடிநீர் பணிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்.

தாயமங்கலம் கோவில் ராஜகோபுர பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறையை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டதில் ஒன்றிய கழக நிர்வாகிள் அய்யாச்சாமி, மலைமேகு, முருகேசன், சாத்தம்மாள், சண்முகம் உள்பட நெசவாளரணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.