மாவட்ட செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளையொட்டிஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் + "||" + Karunanidhi's birthday Provide educational equipment to poor students

கருணாநிதி பிறந்தநாளையொட்டிஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம்

கருணாநிதி பிறந்தநாளையொட்டிஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும்தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம்
கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி, 

கருணாநிதி பிறந்தநாளையொட்டி ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரதிநிதிகள் கூட்டம்

தூத்துக்குடி மாநகர தி.மு.க. பிரதிநிதிகள் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று காலையில் நடந்தது. மாநகர அவைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராஜா, பகுதி கழக செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு தூத்துக்குடி மாநகர தி.மு.க.விற்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் கட்சி கொடி ஏற்றி, கழக கொள்கை விளக்க பாடல்களை ஒலிபரப்பு செய்ய வேண்டும். ஏழை மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும், மரக்கன்றுகள் நட்டும், ரத்ததானம் செய்தும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.