மாவட்ட செய்திகள்

பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு + "||" + Will the children's park seem to be cleaned up? Public expectation

பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நாகக்குடையான் ஊராட்சியில், பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் பல்வேறு ஊராட்சிகளில் அரசின் செலவில் சிறுவர்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு உபகரணம், ஊஞ்சல், உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்வேறு ஊராட்சிகளில் சிறுவர் பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பு இன்றி துருப்பிடித்து சேதமடைந்துள்ளன. இதே போல நாகக்குடையான் ஊராட்சியில் ஜீவா நகர் சாலையில் ஊராட்சி சேவைக்கட்டிடத்தின் எதிர்புறத்தில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி பழுதடைந்துள்ளது. ஆடு, மாடுகள் கட்டும் இடமாக மாறியுள்ளது.


மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. பல லட்ச ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மக்களுக்கு உபயோகப்படாமல் உள்ளது.

எனவே பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவை சீரமைத்து பழுதடைந்துள்ள விளையாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கசம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அந்த பகுதி பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.