பெரியகுளம் கலவரத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


பெரியகுளம் கலவரத்தை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2018 4:00 AM IST (Updated: 13 May 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் கலவரத்தை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து கோவை மாவட்ட இந்து முன்னணி சார்பில் தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கி பேசிய தாவது:-

பெரியகுளம் பகுதியில் நடைபெற்ற கலவரத்தால் தலித் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். வீடுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை அரசு நிவாரண தொகை வழங்காமல் உள்ளது. எனவே அவர்களுக்கு தமிழக அரசு விரைந்து நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சதீஸ், செயலாளர் ஜெய்சங்கர், செய்தி தொடர்பாளர் தனபால், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேட்டுப்பாளையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பி.ராஜ்குமார் தலைமை தாங்கி னார். செயலாளர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தார். மேற்கு நகர பொது செயலாளர் ராஜ்மோகன் வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து இந்து சமுதாய சங்க தலைவர் பொன்னுசாமி, தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமைச்சங்க நகர தலைவர் ராமன், கார்த்தி, தனபால், செந்தில்குமார், சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல் நன்றி கூறினார்.

காரமடை நகர, கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில் காரமடை கார் நிறுத்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட தலைவர் சிவபுகழ் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் மந்திரி, மேற்கு ஒன்றிய பொதுச்செயலாளர் கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னூரில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குட்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர செயலாளர் ஹரிஹரன் கலவரம் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நடராஜன், விஜயகுமார், திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர்.

இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக 100- க்கும் மேற்பட்ட இந்து முன்னணி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தலித் மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து கோஷங் களை எழுப்பினர்.

Next Story