மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்


மக்கள் தொடர்பு முகாம்: பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 13 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 1:26 AM IST)
t-max-icont-min-icon

கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தாலுகா கோவிந்தபுத்தூர் கிராமத்தில் மக்்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.

இந்த முகாமில் கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பில் முதியோர் ஓய்வூதிய தொகைக்கான ஆணைகளையும், 24 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாகளுக்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு உட்பிரிவு சிட்டா வழங்கு வதற்கான ஆணைகளையும் வழங்கினார். மேலும் அவர் வேளாண்மைத்துறையின் சார்பில், 7 விவசாயிகளுக்கு ரூ.36 ஆயிரத்து 416 மதிப் பிலான நலத்திட்ட உதவி களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான நான்கு சக்கர வாகனத்தினையும், 2 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கான சாவி யினையும் என மொத்தம் 62 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 416 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக பொதுமக்களிடமிருந்து 67 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, இதில் 62 கோரிக்கை மனுக்கள் ஏற்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முகாமில், வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகிய துறைகளின் சார்பாக பொதுமக்கள் எளிதாக அறிந்துகொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஷ்வரி உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் (பொறுப்பு) பாலாஜி வரவேற்றார். முடிவில் ஜெயங்கொண்டம் வட்ட வழங்கல் அலு வலர் சம்பத் நன்றி கூறினார். 

Next Story