புதுச்சேரியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


புதுச்சேரியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் தனியார் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 May 2018 4:30 AM IST (Updated: 13 May 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கடுமையான சுற்றுச் சூழல் பாதிப்பை ஏற் படுத்தும் தனியார் தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விசுவ நாதன் கூறினார்.

காரைக்கால்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் புதுச்சேரி மாநில நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான விசுவநாதன் நேற்று காரைக் கால் வந்தார். கட்சி அலுவலகத் தில், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற நாள் முதல், சாதரண மக்கள் வளர்ச்சியில் போதுமான அக்கறை காட்ட வில்லை. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. ஆனால், வெளி நாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும், இந்தியாவில் உள்ள பெரும் முதலாளி வர்க்கத் தினருக்கும் ஆதரவாகவே மத்திய அரசு செயல்பட்டு வரு கிறது. தினம் ஒரு பொய்யான செய்தியை மத்திய அமைச்சர்கள் சொல்லிக் கொண்டே வரு கிறார்கள்.

புதுச்சேரி காலாப்பட்டு பகுதி யில் செயல்பட்டு வரும் மருந்து -மாத்திரைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் அண்மை யில் புதுச்சேரியில் நடைபெற்ற போது திட்ட மிட்டு கலவரம் உருவாக்கப் பட்டது.

இந்த தொழிற்சாலையால் நிலத்தடி நீர், காற்று ஆகியவை கடுமையாக மாசடைகிறது. கடல் வளம் பாதிக்கப்படுகிறது, எங்கள் கட்சியை தவிர, அனைத்து கட்சிகளும் அந்த தொழிற்சாலைக்கு ஆதரவாக செயல்படுகின்றன. உண் மையைச் சொல்ல வேண்டு மென்றால், புதுச்சேரி அரசும் புதுச்சேரி மாநில கவர்னரும் இந்த தனியார் தொழிற்சாலை தொடர்பான பிரச்சினைகளை மென்மை யாக கையாள்வதும், பாரா முகத்துடன் இருப்பதும் வருந்தத்தக்கது. மக்கள் நலன் மற்றும் மாநில நலன் கருதி இந்த தொழிற்சாலையின் உற்பதியை படிப்படியாக குறைத்து, தொழிற்சாலையை மூட வேண்டும்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுபோன்று மாசு ஏற்றடுத்தும் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியையும் அரசு தடை செய்யவேண்டும். புதுச்சேரி மாநில கவர்னர் மற்றும் முதல்-அமைச்சரின் செயல்பாடுகளால் அனைத்து அரசு அலுவலகங்களும் முடங்கியுள்ளன. இலவச அரிசி வழங்கப்படவில்லை, 100 நாள் வேலைத்திட்டம் இல்லை, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, புதிய மக்கள் நலத்திட்டம் இல்லை.

தனியார் பள்ளிகள் விருப்பம்போல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து அவர் களின் கட்டணத்தை முறைப் படுத்தவேண்டும். அடுத்த மாதம் (ஜூன்) 8, 9, 10 தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறும் கட்சியின் அகில இந்திய பொதுக்குழுக் கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் மத்திய அரசின் மக்கள்விரோத செயல்பாடுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story