காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 May 2018 2:15 AM IST (Updated: 13 May 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மாகரல் பகுதியில் மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த மாகரல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் ஒரு மினிடெம்போ அந்த வழியாக சென்றது. அப்போது வீட்டுக்கு வெளியே படுத்திருந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து மினிடெம்போவை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த மினி டெம்போவில் ஆற்று மணல் கடத்தி செல்வது தெரியவந்தது.

அதில் இருந்த சித்தாளப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 24), காஞ்சீபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்த சீனா என்கிற விஜயராகவன் (29), மாகரல் பகுதியை சேர்ந்த சூர்யா (20) ஆகியோரை அவர்கள் மடக்கி பிடித்து மாகரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் மாகரல் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து மினி டெம்போவை பறிமுதல் செய்தனர்.

Next Story