கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது 127 மது பாட்டில்கள் பறிமுதல்


கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேர் கைது 127 மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 May 2018 9:19 PM GMT (Updated: 12 May 2018 9:19 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார். திருட்டுத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில் நேற்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் இரும்பு தொழிற்சாலை அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்த பொன்னேரியை சேர்ந்த கோபால்சாமி (வயது 50) என்பவர் பிடிபட்டார். அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே போல சிறுபுழல்பேட்டையை அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில் தனியார் ஓட்டல் அருகே மது விற்று கொண்டிருந்த மாரிமுத்து (36) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும், தச்சூர் கூட்டுச்சாலை அருகே மது விற்று கொண்டிருந்த பஞ்செட்டியை சேர்ந்த பரந்தாமன் (38) என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களையும், ஆரம்பாக்கத்தை அடுத்த அரும்பாக்கம் சோதனைச்சாவடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட கீழ்மேனி கிராமத்தை சேர்ந்த பிரபா (25) என்பவரிடம் இருந்து 31 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேர் கைது

இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வரதராசன் தலைமையில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 4 பேரையும் கைது செய்தனர். 

Next Story