மாவட்ட செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் விவசாயிகள் கவலை + "||" + Wild elephants who have destroyed the crops near Dhenkanikkottai are concerned farmers

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள் விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 5 காட்டு யானைகள் மாரப்பன்கொட்டாய் என்ற கிராமத்திற்குள் நுழைந்தன. அவைகள் அப்பகுதியில் உள்ள கிருஷ்ணன், சகாதேவன், தமிழ்செல்வன் ஆகிய விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த விவசாய பயிர்களை காட்டு யானைகள் கால்களால் மிதித்தும், தின்றும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதைத் தொடர்ந்து அந்த யானைகள் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.


நேற்று காலை விவசாய நிலங்களுக்கு வந்த விவசாயிகள் யானைகளால் பயிர்கள் நாசம் செய்யப்பட்டிருப்பதை கண்டு கவலையடைந்தனர். மேலும் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தொடர்ந்து அட்டகாசம் செய்துவரும் காட்டு யானைகளை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.