மாவட்ட செய்திகள்

சட்டசபை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள் + "||" + Assembly elections Voted Celebrity

சட்டசபை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்

சட்டசபை தேர்தலில் வாக்களித்த பிரபலங்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கர்நாடக தேர்தலுக்கான விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் வாக்களித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கர்நாடக தேர்தலுக்கான விளம்பர தூதருமான ராகுல் டிராவிட் வாக்களித்தார்.

தேர்தலில் வாக்களித்து விட்டு வந்த மைசூரு இளவரசர் யதுவீர்.

தேர்தலில் வாக்களித்த அனில் கும்பிளே தனது மனைவி, மகளுடன் உள்ளார்.

மனைவி பிரியங்கா திரிவேதியுடன் நடிகர் உபேந்திரா.

மனைவி, மகளுடன் வாக்களித்த மகிழ்ச்சியில் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

ஓட்டுப்போட வந்த நடிகர் ஜக்கேஷ்.

வரிசையில் நின்று வாக்களித்த நடிகை சரோஜா தேவி.
கர்நாடக சட்டசபை தேர்தலில் நேற்று வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றிய பிரபலங்களின் விவரங்களை இங்கே காண்போம்...

*நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

* பா.ஜனதாவை சேர்ந்த எம்.பி. ஷோபா ஹெப்பாலில் அமைக்கப்பட்டு இருந்த பெண்களுக்கான பிரத்யேகமான ‘பிங்க்‘ வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

* பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தனது குடும்பத்தினருடன் வந்து உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் ஓட்டளித்தார்.

* பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியும், நடிகையுமான உமாஸ்ரீ தெரதாள் தொகுதியில் தனது வாக்கை பதிவிட்டார்.

* நடிகை சரோஜாதேவி, மல்லேசுவரத்தில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

* பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள வாக்குச்சாவடியில் திரைப்பட நடிகர் ரமேஷ் அரவிந்த் வாக்களித்தார். இவர் தனது மனைவி அர்ச்சனா மற்றும் மகள் நிகாரிகா ஆகியோருடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகள் நிகாரிகா முதல் முறையாக நேற்று தேர்தலில் வாக்களித்தார்.

* ‘கிரேசிஸ்டார்’ என அழைக்கப் படும் நடிகர் ரவிசந்திரன் ராஜாஜி நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

* நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் பேடராயனபுரா தொகுதியில் உள்ள ராசினஹள்ளியில் உள்ள அரசு பள்ளி வாக்குச்சாவடியில் வந்து வாக்களித்தார்.

* நடிகர் உபேந்திரா தனது மனைவி பிரியங்கா திரிவேதியுடன் வந்து கிரதிகொப்பா கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

* பெங்களூரு யஷ்வந்தபுரம் சட்டசபை தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், நடிகருமான ஜக்கேஷ் தனது மனைவி பரிமளா மற்றும் குடும்பத்தினருடன் வந்து மல்லேசுவரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

* காங்கிரஸ் எம்.எல்.சி.யும், நடிகையுமான ஜெயமாலா, ராதாகிருஷ்ணா வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

* மைசூரு இளவரசர் யதுவீர், மைசூரு மாவட்டம் கிருஷ்ணராஜா தொகுதியில் ஓட்டளித்தார்.

* முன்னாள் கிரிக்கெட் வீரர் டிராவிட் பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதியிலும், மற்றொரு முன்னாள் கிரிக்கெட் வீரரான அனில் கும்பிளே பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியிலும் ஓட்டுப்போட்டனர்.

* நெலமங்களாவில், நடிகை லலிதா தனது மகன் வினோத் ராஜூடன் வந்தும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

* பெங்களூரு ராஜாஜி நகர் தொகுதியில் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் வாக்களித்தார்.