மாவட்ட செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Change of train service due to maintenance work

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம்
தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-குன்டூர் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை-குன்டூர் பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு மதியம் 2.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் (வண்டி எண்: 66051) வரும் 14, 16, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு மதியம் 2.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் (66052) வரும் 14, 16, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* சூலூர்ப்பேட்டையில் இருந்து மூர்மார்க்கெட் நோக்கி வரும் 14, 16, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பயணிகள் சிறப்பு ரெயில் 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக மதியம் 12 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.