ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா கொண்டாட்டம் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்தனர்
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
சென்னை,
செவிலியர் தின விழா கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
‘மருத்துவத் துறையில் செவிலியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் செவிலியர்கள் பாலமாக விளங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சேவை மனப்பான்மையோடு செவிலியர்கள் நோயாளிகளைப் பராமரித்து வருகிறதை நான் பாராட்டுகிறேன். மருத்துவமனையின் இதயத் துடிப்பே செவிலியர்கள் தான்’, என்றார்.
நிகழ்ச்சியின்போது செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின விழா உறுதிமொழி எடுத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ‘கேக்’ வெட்டி செவிலியர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகார் டாக்டர் இளங்கோ, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story