திண்டுக்கல், பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல், பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 May 2018 3:45 AM IST (Updated: 13 May 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்து திண்டுக்கல் மற்றும் பழனியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திண்டுக்கல், 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்தும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர் கணேஷ் தலைமை தாங் கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் முத்துக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.இதேபோல, பழனியிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட செயலாளர் பாலன், பொதுச்செயலாளர் ஜெகன், மாநில அமைப்பாளர் பக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Next Story