நவிமும்பையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் தங்கச்சங்கிலி பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
நவிமும்பையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மும்பை,
நவிமும்பையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்கச்சங்கிலி பறிப்பு
நவிமும்பை காமோட்டே 21-வது செக்டர் பகுதியை சேர்ந்த பெண் தனஸ்ரீ தேஷ்முக் (வயது46). இவர் சம்பவத்தன்று அங்குள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மருந்துகடையை கடந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், தனஸ்ரீ தேஷ்முக் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்தனர்.
போலீஸ் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உதவி கேட்டு அலறினார். ஆனால் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். தனஸ்ரீ தேஷ்முக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்த தங்கச்சங்கிலியின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும்.சம்பவம் குறித்து அவர் காமோட்டே போலீஸ் நிலையத்தில் புகார் ெகாடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை அடையாளம் காண அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story