திருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது டேங்கர் லாரி மோதி 8 பெண்கள் உள்பட 10 பேர் பலி
திருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.
நாந்தெட்,
திருமண கோஷ்டியினர் சென்ற டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 8 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள்.
திருமண கோஷ்டியினர்
லாத்தூர் மாவட்டம் அவுசா தாலுகா கரோசா கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாந்தெட் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு டெம்போவில் சென்றனர்.
பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் டெம்போவில் நெருக்கமாக நின்றபடி அபாயகரமான பயணத்தில் ஈடுபட்டனர். இந்த டெம்போ நாந்தெட் மாவட்டம் லாத்தூர்-முகேத் சாலையில் சென்று கொண்டு இருந்தது.
10 பேர் பலி
அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த எரிபொருள் ஏற்றிச்செல்லும் டேங்கர் லாரி ஒன்று டெம்போ மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணம் செய்த 8 பெண்கள் உள்பட 10 பேர் உடல்நசுங்கி பலியாகினர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயமடைந்த வர்களை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story