பெண் குழந்தைகளுக்கு மவுசு


பெண் குழந்தைகளுக்கு மவுசு
x
தினத்தந்தி 13 May 2018 9:47 AM GMT (Updated: 13 May 2018 9:47 AM GMT)

குழந்தையை தத்தெடுக்க விரும்பும் பெரும்பாலானோரின் விருப்ப தேர்வு பெண் குழந்தைகளாகவே இருக்கிறது.

கடந்த ஆறு ஆண்டுகளில் ஆண் குழந்தைகளை காட்டிலும் 60 சதவீதம் அதிகமாக பெண் குழந்தைகளே தத்தெடுக்கப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிலும் மகாராஷ்டிராதான் குழந்தைகள் தத்தெடுப்பில் முன்னணியில் இருக்கிறது. அங்கு கடந்த ஆண்டு 642 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் 35 பெண் குழந்தைகளாகும்.

கர்நாடகா மாநிலத்தில் தத்து கொடுக்கப்பட்ட 286 குழந்தைகளில் 167 பெண் குழந்தைகள். 2017-18-ம் ஆண்டில் இந்தியாவில் 3276 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 1858 பெண் குழந்தைகள். ஆண் குழந்தைகள் 1418. 2016-2017-ம் ஆண்டு தத் தெடுக்கப்பட்ட 3210 குழந்தைகளில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை 1915.

இதுகுறித்து குழந்தைகள் தத்தெடுப்பு ஆணைய தலைமை நிர்வாக அதிகாரி லெப்டினென்ட் கர்னல் தீபக்குமார் கூறுகையில், ‘‘தத்தெடுக்கும் பெற்றோர் பெண் குழந்தைகளையே அதிகமாக விரும்புகிறார்கள். பெண்-ஆண் குழந்தைகள் தேர்ந்தெடுப்பு சதவீதம் 55:45 என்ற அளவில் இருக்கிறது.

அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் அதிகமாக இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களிலும் குழந்தையை அதிகமாக தத்தெடுக்க விரும்புகிறார்கள்.

ஆண் குழந்தையை காட்டிலும் பெண் குழந்தையை வளர்த்து ஆளாக்குவதும், கையாளுவதும் எளிதாக இருப்பதாக நினைக்கிறார்கள். அதுவே பெண் குழந்தைகள் அதிகம் தத்தெடுக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது’’ என் கிறார்.

Next Story