திருவருட்பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


திருவருட்பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2018 4:15 AM IST (Updated: 13 May 2018 10:55 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மறைமாவட்டம், திருவருட்பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்றுமாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மறைமாவட்ட முதன்மை குருவும், திருவருட்பேரவை மாவட்ட துணைத்தலைவருமான ஞானப்பிரகாசம் தலைமை தாங்கினார். திருவருட்பேரவை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மறைமாவட்ட அதிபர் செபாஸ்டின்பெரியண்ணன், மறைமாவட்ட வேந்தர் ஜான்சக்கரியாஸ், திருவருட்பேரவை மாவட்ட செயலாளர் அமலதாஸ்ஜான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.


ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மேய்ப்பு பணி நிலைய இயக்குனர் ஜோசப்மரியவியான்னி, மாவட்ட திருவருட்பேரவை இணைத்தலைவர் கோவிந்தராஜன், ஆலோசகர் கலந்தர் நைனார்முகமது, திருவருட்பேரவை உறுதிமொழிகோவிந்தராஜன், செயலாளர்கள் தாஜூதீன், தியாகராஜன், ஐ.ஜே.கே.மாவட்ட செயலாளர் சிமியோன்சேவியர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story