நெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு


நெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 14 May 2018 2:00 AM IST (Updated: 14 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

நெல்லை, 

நெல்லை மார்க்கெட்டில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.

அதிகாரிகள் ஆய்வு

சென்னை தொழிலாளர் துறை ஆணையாளர் நந்தகோபால் உத்தரவின் பேரில் மதுரை கூடுதல் ஆணையாளர் சரவணன், நெல்லை இணை ஆணையாளர் ஹேமலதா ஆகியோர் வழிகாட்டுதலின்படி நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் நெல்லை டவுன் மார்க்கெட் மற்றும் சந்திப்பு, திசையன்விளை, உவரி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உரக்கடைகள், உணவு நிறுவனங்கள் உள்ளிட்ட 73 நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில், எடையளவு சட்டத்தின் கீழ் 21 முரண்பாடுகளும், பொட்டலப்பொருட்கள் விதிகளின் கீழ் 4 முரண்பாடுகளும், இதர சட்டங்களின் கீழ் 5 முரண்பாடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய வணிகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விழிப்புணர்வு முகாம்

மேலும் நெல்லையில் உள்ள 2 கடைகளில் தொழிலாளர் துறையால் உருவாக்கப்பட்ட TNLMCTS செல்போன் செயலி குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. எடையளவு குறைவு, பொட்டலப்பொருட்கள் அறிவிப்புகள் குறிப்பிடாமல் விற்பனை செய்தல் உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள், நுகர்வோர் TNLMCTS செல்போன் செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். புகார் மீது தொழிலாளர் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை நெல்லை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) ராமகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

Next Story