பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை, அமைச்சர் கமலக்கண்ணன் உறுதி
இலவச மனைப்பட்டாகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முதல்-அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்ட மக்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை சுமார் 618 மனைப்பட்டாக்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அந்த மனைகளுக்கு எந்தவொரு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. அதனால் பட்டா பெற்றவர்களில் ஒரு சிலரை தவிர பலர் அரசு வழங்கிய இலவச மனையில் வீடுகளை கட்டி குடியேறாமல் இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தங்களது மனைப்பட்டாவை வசப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கையையும் எடுக்காமல் உள்ளனர்.
இந்த நிலையில் காரைக்காலில் இலவச வீட்டுமனை கேட்டு ஆயிரக்கணக்கானோர் மாவட்ட வருவாய்த்துறையிடம் மனு அளித்துள்ளனர். இதனையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமியின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள நிலங்களை கணக்கெடுத்து அதில் மனைப்பட்டா தருவதற்கான பணிகளை மாவட்ட வருவாய்த்துறை தொடங்கி உள்ளது.
இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக தற்போது வருவாய்த்துறை தேர்வு செய்துள்ள நிலங்களையும், ஏற்கனவே அரசு வழங்கி அடிப்படை வசதிகள் இல்லாத மனைகளையும் அமைச்சர் கமலக்கண்ணன் ஆய்வு செய்தார். அவருடன் மாவட்ட கலெக்டர் கேசவன், சார்பு கலெக்டர் விக்ராந்த் ராஜா, நகராட்சி ஆணையர் சுபாஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் சென்றனர்.
பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியது:-
காரைக்கால் பிள்ளைத் தெருவாசல் பகுதி சோழன் ஓடை, முரசொலி நகர், காஞ்சிபுரம் கோவில்பத்து, காசாக்குடி ஆகிய இடங்களில் சுமார் 618 இலவச மனைப்பட்டாக்கள் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்த மனைகளை ஆய்வு செய்ததில், சாலைகள், சாக்கடை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அங்கு மக்கள் அங்கு குடியேறவில்லை. ஒரு சிலர் மட்டும் அங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலப்பரப்பில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயத்திடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Tags :
Next Story