மாவட்ட செய்திகள்

மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணி + "||" + Officer in Central Government Departments

மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணி

மத்திய அரசு துறைகளில் அதிகாரி பணி
யூ.பி.எஸ்.சி., பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மார்க்கெட்டிங் ஆபீசர், உதவி இயக்குனர், விரிவுரையாளர் போன்ற பணியிடங்களுக்கு மொத்தம் 71 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

பணிப் பிரிவு வாரியாக விரிவுரையாளர் பணிக்கு 36 இடங்களும், மார்க்கெட்டிங் அதிகாரி பணிக்கு 28 இடங்களும், உதவி நிர்வாக அதிகாரி பணிக்கு 4 இடங்களும் , உதவி இயக்குனர் பணிக்கு 3 இடங்களும் உள்ளன. மார்க்கெட்டிங் ஆபீசர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம், மற்ற பணி களுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

வேளாண்மை, தாவரவியல், வேளாண் விற்பனை, பொருளாதாரவியல், வணிகவியல் போன்ற படிப்புகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள், வெட்னரி சயின்ஸ், அனிமல் ஹஸ்பண்டரி பட்டப்படிப்பு, சிவில் என்ஜினீயரிங் பட்டப் படிப்பு மற்றும் குறிப்பிட்ட பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். 18-5-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.