மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Taskmakers Demonstration

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சீபுரத்தில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் காஞ்சீபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சீபுரம்,

சென்னை மண்டலம் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தாமதம் செய்து வரும் மத்திய அரசை கண்டித்தும் காஞ்சீபுரம் காவலான் கேட் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில், டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் டில்லிபாபு, நிர்வாகிகள் நிர்மல்குமார், நாச்சியப்பன், குட்டிவேல், தாணிவேல் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். முடிவில் தலைமை நிலைய செயலாளர் மணிவண்ணன் நன்றி கூறினார்.