டெல்லியில் புழுதிப்புயல்: சென்னையில் 5 விமானங்கள் ரத்து


டெல்லியில் புழுதிப்புயல்: சென்னையில் 5 விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 15 May 2018 4:30 AM IST (Updated: 15 May 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் புழுதிப்புயல் தாக்கியதால் சென்னையில் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆலந்தூர்,

டெல்லியில் புழுதிப்புயல் தாக்கியதால் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 3 விமானங்களும், சென்னையில் இருந்து மும்பை, ஐதராபாத்திற்கு செல்ல வேண்டிய 2 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து சிங்கப்பூர், அந்தமான், புனே, மும்பை உள்பட பல இடங்களுக்கு செல்ல வேண்டிய 10–க்கும் மேற்பட்ட விமானங்கள் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.

இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விமான சேவை தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையாக அறிவிக்கப்படாததால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story