திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்துடன் இளம்பெண், காதலனுடன் ஓட்டம்


திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்துடன் இளம்பெண், காதலனுடன் ஓட்டம்
x
தினத்தந்தி 15 May 2018 3:45 AM IST (Updated: 15 May 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சத்துடன் இளம்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

குமாரபுரம்,

தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம்பெண் பிளஸ்-2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வருகிற 27-ந் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் இளம்பெண்ணின் பெற்றோர் ஈடுபட்டு இருந்தனர்.

இந்தநிலையில், வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அத்துடன் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றையும் காணவில்லை. இதையடுத்து இளம்பெண்ணை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

காதலனுடன் ஓட்டம்

இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்திய போது, மாயமான இளம்பெண், நகை மற்றும் பணத்துடன் காதலனுடன் ஓடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காதலனுடன் ஓடிய இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். 

Next Story