மாவட்ட செய்திகள்

மாநில ரிசர்வ் போலீஸ் வளாக உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி + "||" + The State Reserve Police into the campus gym Cheetah

மாநில ரிசர்வ் போலீஸ் வளாக உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி

மாநில ரிசர்வ் போலீஸ் வளாக உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி
மாநில ரிசர்வ் போலீஸ் வளாக உடற்பயிற்சி கூடத்துக்குள் சிறுத்தைப்புலி புகுந்தது.
மும்பை,

மாநில ரிசர்வ் போலீஸ் வளாக உடற்பயிற்சி கூடத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி மயக்க மருந்து செலுத்தி மீட்கப்பட்டது.

மும்பை, ஆரேகாலனி பகுதியில் மாநில ரிசர்வ் போலீஸ் படை வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் போலீஸ்காரர் ஒருவர் இருந்தார். அப்போது திடீரென சிறுத்தைப்புலி ஒன்று உடற்பயிற்சி கூடத்திற்குள் நுழைந்தது.


சிறுத்தைப்புலி நுழைந்ததை பார்த்து போலீஸ்காரர் அதிர்ச்சி அடைந்தார். எனினும் அவர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்து வெளியே தப்பி வந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த 5 வயது ஆண் சிறுத்தைப்புலியை மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். பின்னர் அவர்கள் கூண்டில் அடைத்து சிறுத்தைப்புலியை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவிற்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தைப்புலி மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் அது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா காட்டு பகுதியில் விடப்பட்டது.